வணிக முகாமைத்துவத்தில் அடிப்படைச் சான்றிதல்

திறனாய்வுப் பரீட்சை விண்ணப்பப் படிவம்

உள்வாங்கல்:
ஜனவரி / ஜூன்
கற்கைநெறிக்காலம்:
௦1 வருடம்

ஸ்லிட் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட இக்கற்கை நெறியானது, ஐக்கிய இராச்சியத்தின் எடெக்சல் நிறுவனத்துடன் இணைந்து வடிவமைக்கப்பட்ட ஒன்றாகும். பட்டமானி கற்கைநெறியின் அனுமதி வேண்டுகோள்களைப் பூர்த்தி செய்யமுடியாத மாணவர்களுக்கென மிகவும் தனித்துவமான கற்கை வழிமுறையினை ஐக்கிய இராச்சியம் வழங்கியுள்ளது. இதனை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்வதன்மூலம், ஸ்லிட் கம்பியூட்டிங்கின் வணிக முகாமைத்துவ டிப்ளோமா கற்கையில் சேர்ந்துகொள்ளும் வாய்ப்பு இம்மாணவர்களுக்குக் கிட்டுகின்றது. பங்காளர் பல்கலைக்கழக கற்கை நெறிகளை தொடர்வதற்கு இவ்வழிமுறை மிகவும் சிறந்த வழிமுறையாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாடநெறி உள்ளடக்கம்

1ம் தவணை

  • ஆங்கில தொடர்பாடல் I
  • கல்வி எழுத்து I
  • கணிதம் I
  • வணிக நிர்வாக அறிமுகம்

2ம் தவணை

  • ஆங்கில தொடர்பாடல் II
  • மைக்ரோ பொருளாதாரம்
  • கணிதம் II

3ம் தவணை

  • வணிக தகவல் அமைப்புக்கள்
  • சந்தைப்படுத்தல் கொள்கைகள்
  • மைக்ரோ பொருளாதாரம்
  • நிறுவன நடத்தை

காலம் மற்றும் பாடநெறி அமைப்பு

இக்கற்கை நெறியானது வாரநாட்களில் தொடர்ந்து ஒரு வருட காலத்திற்கு நடைபெறும் முழு நேரக் கற்கையாகும். இதனைப் பூர்த்தி செய்வதன் மூலம் அடிப்படைச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ள முடிவதுடன், பட்டமானி வரை கல்வியைத் தொடரவும் முடியும்.

அனுமதித் தகைமைகள்

  • க. பொ. த. சாதாரண தரப் பரீட்சையில், ஒரே அமர்வில், கணிதம் மற்றும் ஆங்கில பாடங்களில் திறமைச் சித்தியுடன் (credit) குறைந்தது ஆறு (௦6) பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும். அல்லது
  • க. பொ. த. சாதாரண தர (லண்டன்) பரீட்சையில், ஒரே அமர்வில், கணிதம் சார்ந்த ஒரு பாடம் மற்றும் ஆங்கில பாடங்களில் திறமைச் சித்தியுடன் (credit) குறைந்தது ஆறு (௦6) பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும். அத்துடன்
  • ஸ்லிட் நிறுவனத்தினரால் நடாத்தப்படும் திறனாய்வுப் பரீட்சை, கட்டாயத் தேர்வுகளான ஆங்கிலம் மற்றும் கணிதப் பரீட்சைகளிலும் சித்தி பெறுதல் அவசியமாகும்.

திறனாய்வுப் பரீட்சை

இப் பரீட்சையானது பகுப்பாய்வு, தர்க்கரீதியான மற்றும் கணித திறனாய்வுகளைக் கொண்டமைந்தது. பரீட்சை நடைபெறும் திகதி, நேரம் பற்றிய விபரங்கள், தேசிய பத்திரிகைகள் மூலமாக அறிவிக்கப்படும். சிங்களம், ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் இப்பரீட்சை நடத்தப்படும்.
குறிப்பு: சகல பரீட்சார்த்திகளும், பரீட்சை ஆரம்பிக்கும் நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாகவே, பரீட்சை நடைபெறும் இடத்திற்கு வருகை தருதல் கட்டயமாகும்.

பாடநெறிக் கட்டணம்

வணிக முகாமைத்துவ அடிப்படைக் கற்கைநெறி (3 தவணைகள் – 1 வருடம்)

தவணைக் கட்டணம் ரூ. 80 000.00, ஒவ்வொரு தவணையின் ஆரம்பத்திற்கு முன்னதாகவே செலுத்தப்படல் வேண்டும் (ஒரு தவணைக்கான பாடப் புத்தகங்கள், பரீட்சைகள் மற்றும் ஆய்வுகூடப் பாவனை போன்றவை உள்ளடங்கியுள்ளது).

பதிவுக் கட்டணமாக ரூ.1௦,௦௦௦ பாடநெறி ஆரம்பிக்கும் முன்னதாகவே செலுத்தப்படல் வேண்டும்.

டிப்ளோமா மற்றும் பட்டமானி மட்டக் கற்கைகளின் இறுதியாண்டுப் பட்ட மேல் இணைப்புத் தேர்வுகளுக்கான கட்டணங்கள், கல்வியாண்டின் அடிப்படையில் மாற்றம் பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுகின்றன என்பதனை, தயவு செய்து கருத்திற் கொள்ளவும்.

குறிப்பு: சகல் கட்டணங்களுடனும் 2% தே.க.வ. சேர்த்து அறவிடப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

  • திறனாய்வுப் பரீட்சை விண்ணப்பப் படிவத்தினை இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். ஆர்வமுள்ளவர்கள், குறித்த அடிப்படைப் பாடநெறியின் பெயரைத் தெளிவாகக் குறிப்பிட்டு, நேரடியாக ஸ்லிட் கம்பியூடிங் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.
  • விண்ணப்பதாரிகள் அனைவரும் திறனாய்வுப் பரீட்சை மற்றும் செயற்பாட்டுக் கட்டணமாக ரூ.1,௦௦௦/- இனை செலுத்துதல் வேண்டும்.
  • இக்கட்டணமானது, “SLIIT Computing (Pvt) Ltd” எனும் பெயருக்கு, இலங்கை வங்கி, கொள்ளுப்பிட்டி கிளையின் நடைமுறைக் கணக்கு இலக்கம்: 1630619 இற்கு அல்லது, சம்பத் வங்கி, கொள்ளுப்பிட்டி கிளையின் கணக்கு இலக்கம்: 013410001688 இற்குச் செலுத்தப்படல் வேண்டும்.
  • முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் மற்றும் பணம் செலுத்திய வங்கிச் சீட்டு என்பன பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும்.

 

மாணவர் விவகார மற்றும் அனுமதிகள் தொடர்பான பிரிவு,

ஸ்லிட் கம்பியூடிங் (தனியார்) நிறுவனம்,

13ம் மாடி, இலங்கை வங்கி வர்த்தகக் கோபுரம்,

இல. 28, பரி. மைக்கல் வீதி,

கொழும்பு ௦3.

துரித தொலைபேசி இலக்கம்: 0772 66 55 55

தொலைபேசி இலக்கம்: 0117 54 3600

இப் பாடநெறிக்கான குறித்தளவு வெற்றிடங்களே காணப்படுவதனால், உங்கள் இடத்தைப் பதிவு செய்துகொள்ள இப்போதே விண்ணப்பியுங்கள்.

இன்றே விண்ணப்பியுங்கள்