தகவ தொழிநுட்பத்தில் இளமானி

திறனாய்வுப் பரீட்சை விண்ணப்பப் படிவம்

உள்வாங்கல்:
ஜனவரி / ஜூன்
கற்கைநெறிக்காலம்:
௦3 வருடம்

கவல் தொழில்நுட்பத்தில் பட்டமானி கற்கை நெறியானது தகவல் தொழிநுட்பம் எனும் பரந்த துறையில், உங்கள் தொழில்சார் வாழ்க்கைக்கு தேவையான நடைமுறை இணையம், தகவல் மற்றும் பல்லூடகத் திறன்கள் போன்றவற்றின் திறன்கள் மற்றும் அறிவினைப் பெற்றுத் தரும். இப்பாடநெறியானது, விமர்சனம், மதிப்பீடு, வடிவமைப்பு, குறிப்பான விடயங்கள், தேவைகள் போன்றவற்றை அறிந்துகொள்ள, தீர்வுகளை உருவாக்க, ஏனையோருடன் பகிர்ந்து கொள்ள, இத்துறையின் மாணவர்களுக்கு மிகவும் தேவையான அறிவினைப் பெற்றுத் தருகின்றது. தொழில்நுட்பம் மற்றும் கற்பனை ஆகியவற்றின் மூலமாக ஆராய அனுமதிப்பதுடன், ஒரு தகவல் தொழிநுட்ப நிபுணராக மட்டுமன்றி ஒரு ஆக்கபூர்வ சிந்தனையாளராகவும் மாணவர்களின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றுகின்றது. இப்பாடநேறியானது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதியுடன், ஸ்லிட் நிறுவனத்துடன் இணைந்து ஸ்லிட் கம்பியூடிங் நிறுவனத்தினரால் நடாத்தப்படுகின்றது.

இது யாருக்கான பாடநெறி?

பின்வரும் துறைகளில் சிறந்து விளங்க விரும்புபவர்களுக்காக:

 • மென்பொருள் வடிவமைப்பாளர்கள்
 • மென்பொருள் உருவாக்குநர்கள்
 • மென்பொருள் தர நிர்ணயப் பொறியாளர்
 • அமைப்புகள் ஆய்வாளர்கள்
 • வணிக ஆய்வாளர்கள் மற்றும் அமைப்புகள் நிர்வாகிகள்
 • ஊடக இயக்குனர்கள்
 • ஒலி ஒளி அமைப்பு பொறியாளர்கள்
 • பட மாதிரிகள் வடிவமைப்பாளர்கள்
 • தொடர்பாடல் முறைகள் வடிவமைப்பாளர்கள்
 • இடைமுக வடிவமைப்பாளர்கள்
 • முப்பரிமாண இணைய வடிவமைப்பாளர்கள்
 • பல்லூடக உருவாக்குநர்கள்
 • பல்லூடகத் தொகுப்பாளர்கள்
 • பல்லூடக அமைப்புகள் ஆய்வாளர்கள்
 • இணையத்தள வடிவமைப்பாளர்கள்
 • பல்லூடக வல்லுனர்கள்

ஏனைய வாய்ப்புக்கள்

கற்கை நெறிகளுக்கு அப்பாலான, பலதரப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் பின்வரும் போட்டிகளிலும் பங்குபெறும் வாய்ப்புக்களையும் நாம் வழங்குகின்றோம்.

 • தேசிய சிறந்த தர மென்பொருள் விருதுகள் (NBQSA)
 • இ-சுவாபிமானி
 • மோட்டோரோலா தீர்வு – SLASSCOM பல்கலைக்கழக போட்டி.

மேலும், மாணவர்கள் மாநாடுகளில் பங்கேற்க, IEEE ஆராய்ச்சி வெளியீடு போன்ற ஆராய்ச்சி பத்திரிகைகளில் கட்டுரைகளை வெளியிடுவதற்கும் வாய்ப்புக்கள் வழங்கப்படும்.

இப்பாடநெறியைத் தெரிவு செய்வதற்கான காரணம் என்ன?

 • இந்தப் பட்டப்படிப்பு நிகழ்ச்சித் திட்டமானது ஒரு மாணவர் தகவல் தொழில்நுட்பத்தில் தேசிய டிப்ளமோ மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் பட்டமானி கற்கையில் முறையே 2 வது ஆண்டு மற்றும் 3 வது ஆண்டு போன்ற தகைமைகளைப் பெறுவதன் மூலம் வெளியேறும் விருப்பத் தெரிவுகளை தெரிவுசெய்யகூடிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 • குறிப்பாக இறுதி ஆண்டில், நீங்கள் உங்கள் சொந்த விருப்பத்தின்படி தகவல் தொழிநுட்பம் மற்றும் தொடர்பாடும் பல்லூடகத் தொழில்நுட்பம் போன்ற சிறப்புத் தேர்ச்சியுடன் கூடிய தகவல் தொழிநுட்ப இளமானிப் பட்டத்தினைப்  பெற்றுக்கொள்ளக்கூடியவாறு, தேவையான பாடத் தொகுதிகளை தீர்மானிக்க முடிவதுடன், பங்காளர் பல்கலைக்கழகம் மூலமாக ஒரு வெளிநாட்டு பட்டக் கற்கைநெறியினையும் தொடர்வதற்கு முடியும்.  துறைசார் முதலாளிகள் தேடும் பரந்த அறிவினை அடிப்படையாகவே இப்பாடநெறி வழங்குகின்றது.
 • தொழில்முறை வழிகாட்டுதலின் ஆதரவு மற்றும் பயிற்சி, கல்வி, தொழில்முறை மற்றும் நடைமுறை செயற்பாடு அனைத்தையும் ஒருங்கே கற்று, தகவல் தொழில்நுட்ப துறையில் சிறக்க உங்களை இன்றே தயார் செய்துகொள்ளுங்கள்.

அனுமதித் தகைமைகள்

 • க.பொ.த. உயர் தரத்தின் (உள்நாட்டு / லண்டன்) எப்பிரிவிலாவது ஆகக்குறைந்தது ஒரு பாடத்திலேயேனும் சித்தி பெற்றிருத்தல் அவசியமாகும்.
 • ஸ்லிட் கம்பியூட்டிங்கின் திறனாய்வுப் பரீட்சையில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.

திறனாய்வுப் பரீட்சை

குறைந்தபட்சத் தகைமைகளையுடைய மாணவர்கள் இப்பாடநெறிக்காக விண்ணப்பிக்க விரும்பினால், திறனாய்வுப் பரீட்சை விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறோம்.
இப் பரீட்சையானது பகுப்பாய்வு, தர்க்கரீதியான மற்றும் கணித திறனாய்வுகளைக் கொண்டமைந்தது. பரீட்சை நடைபெறும் திகதி, நேரம் பற்றிய விபரங்கள், தேசிய பத்திரிகைகள் மூலமாக அறிவிக்கப்படும். சிங்களம், ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் இப்பரீட்சை நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

 • திறனாய்வுப் பரீட்சை விண்ணப்பப் படிவத்தினை இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். ஆர்வமுள்ளவர்கள், தகவல் தொழிநுட்பப் பட்டமானிப் பாடநெறியின் பெயரைத் தெளிவாகக் குறிப்பிட்டு, நேரடியாக ஸ்லிட் கம்பியூடிங் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.
 • விண்ணப்பதாரிகள் அனைவரும் திறனாய்வுப் பரீட்சை மற்றும் செயற்பாட்டுக் கட்டணமாக ரூ.1,௦௦௦/- இனை செலுத்துதல் வேண்டும்.
 • இக்கட்டணமானது, “SLIIT Computing (Pvt) Ltd” எனும் பெயருக்கு, இலங்கை வங்கி, கொள்ளுப்பிட்டி கிளையின் நடைமுறைக் கணக்கு இலக்கம்: 1630619 இற்கு அல்லது, சம்பத் வங்கி, கொள்ளுப்பிட்டி கிளையின் கணக்கு இலக்கம்: 013410001688 இற்குச் செலுத்தப்படல் வேண்டும்.
 • முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் மற்றும் பணம் செலுத்திய வங்கிச் சீட்டு என்பன பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும்.

 

மாணவர் விவகார மற்றும் அனுமதிகள் தொடர்பான பிரிவு,

ஸ்லிட் கம்பியூடிங் (தனியார்) நிறுவனம்,

13ம் மாடி, இலங்கை வங்கி வர்த்தகக் கோபுரம்,

இல. 28, பரி. மைக்கல் வீதி,

கொழும்பு ௦3.

துரித தொலைபேசி இலக்கம்: 0772 66 55 55

தொலைபேசி இலக்கம்: 0117 54 3600

பாடநெறி உள்ளடக்கம்

தகவல் தொழிநுட்பத்தில் டிப்ளோமா

1ம் வருடம் 1ம் தவணை

 • தகவல் தொழில்நுட்பத்தின் அடிப்படைகள்
 • கணினி நிரலாக்க நுட்பங்கள் மற்றும் நடைமுறைகள்
 • நிரலாக்க அறிமுகம் (சி / சி ++)
 • வணிக ஆங்கிலம் மற்றும் தொடர்பு திறன்கள்
 • தகவல் தொழில்நுட்பத்திற்கான கணிதம்

1ம் வருடம் 2ம் தவணை

 • தகவல் தொடர்பு மற்றும் கணனிப் பிணைப்புக்கள்
 • அமைப்புக்களின் பகுப்பாய்வு மற்றும் வடிவமைப்பு
 • பொருள் சார் நிரலாக்கம் (ஜாவா)
 • தரவுத்தள முகாமைத்துவ அமைப்புகள்
 • தொழில்நுட்ப தொடர்பாடல்

2ம் வருடம் 1ம் தவணை

 • இணைய மேம்பாடு
 • கணினி பட மாதிரிகள் மற்றும் பல்லூடகம்
 • கணினி வன்பொருள் மற்றும் இயக்க முறைமைகள்
 • பொருள் சார் பகுப்பாய்வு மற்றும் வடிவமைப்பு
 • பொருளாதாரம் மற்றும் முகாமைத்துவம்

2ம் வருடம் 2ம் தவணை

 • TCP / IP பிணைப்புக்கள் பற்றிய கருத்துகள்
 • பொருள் சார்ந்த தரவுத்தள முகாமைத்துவ அமைப்புக்கள்
 • தரவு கட்டமைப்புகள் மற்றும் அல்கொரிதம்
 • அல்கொரித வடிவமைப்பு மற்றும் பகுப்பாய்வு
 • தகவல் தொழிநுட்பத் திட்டம்

தகவல் தொழிநுட்பத்தில் விசேடக் கற்கை

3ம் வருடம் 1ம் தவணை

 • மென்பொருள் பொறியியல் கருவிகள் மற்றும் அளவீடுகள்
 • கணனிப் பிணைப்புக்கள் வடிவமைப்பு மற்றும் பயன்படுத்தல்
 • தகவல் தொழிநுட்ப திட்ட வடிவமைப்பு மற்றும் முகாமைத்துவம்
 • விரிவான வடிவமைப்பு / பகுப்பாய்வு திட்டம் I
 • தகவல் தொழினுட்பத்தின் நவீன தலைப்புகள்

3ம் வருடம் 2ம் தவணை

 • விநியோகிக்கப்படும் கூறுகள் அடிப்படையிலான மென்பொருள் அபிவிருத்தி
 • சந்தைப்படுத்தல் மற்றும் வர்த்தகச் சட்டம்
 • மென்பொருள் தர உத்தரவாதம்
 • விரிவான வடிவமைப்பு / பகுப்பாய்வு திட்டம் II

இப் பாடநெறிக்கான குறித்தளவு வெற்றிடங்களே காணப்படுவதனால், உங்கள் இடத்தைப் பதிவு செய்துகொள்ள இப்போதே விண்ணப்பியுங்கள்.

இன்றே விண்ணப்பியுங்கள்