fbpx

பேட்போர்ட்ஷியர் பல்கலைக்கழக இளமானி – கணனிப் பிணைப்பியல்

உள்வாங்கல்:
ஜனவரி பெப்ரவரி / செப்டெம்பர் ஒக்டோபர்
கற்கைநெறிக்காலம்:
௦1 வருடம்

லுவலகம் மற்றும் பிரதான வீதிகளிலிருந்து உங்கள் வீட்டிற்கும், நீங்கள் இயக்கிக் கொண்டிருக்கும் வாகனத்திற்குமாக கணினிப் பிணைப்புகள் எல்லா இடங்களிலும் அமைந்து காணப்படுகின்றன. இவை நாம் மிகவும் சிறப்பான முறையில் வாழ்க்கையை கொண்டு செல்ல உதவுகின்றன. தகவல் அமைப்புகளின் இதயமாக இவை செயற்படுவதுடன், பெருகி வரும் நிலையில், அவற்றின் நன்மைகளை புரிதலுடனும் எவ்வாறு பயன்படுத்துடுவது என்பது பற்றியும் மக்களிடம் காணாப்படும் தேவையும் அதிகரித்துள்ளது.

நிறுவனம்

பெட்போர்ட்ஷியர் பல்கலைக்கழகம் என்பது ஒரு நவீன, புதுமையான பல்கலைக்கழகமாகும். இது 100 ஆண்டுகளுக்கு மேலாக உயர் தரமான கல்வியின் பாரம்பரியத்தை கொண்டது. இப் பல்கலைக்கழகமானது தனது மாணவர்களை நன்கு கற்றவர்களாகவும், தொழில் புரியும் மற்றும் தொழில்முனையும் உலகளாவிய குடிமக்களாக வளரச் செய்கின்றது. அத்துடன் இப் பல்கலைக்கழகம் தனது மாணவர்களின் வாழ்க்கைக்குத் தேவையான சகல உதவிகளையும் வழங்கி, கல்வி மீதான அவர்களது ஆர்வத்தினை தூண்டுவதற்கான ஊக்குவிப்பினையும் வழங்கி வருகின்றது.

 

பெட்போர்ட்ஷியர் பல்கலைக்கழகத்தில் கற்றல்

  • நூற்றுக்கும் மேலான நாடுகளைச் சார்ந்த 24,000 இற்கும் அதிகமான மாணவர்கள்
  • சர்வதேச மற்றும் பல்-கலாசார கற்கும் சமூகங்கள்
  • சீனா, மத்திய கிழக்கு, ஐரோப்பா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் கல்விப் பங்காளர்கள்
  • சீனா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளின் கோடை காலப் பள்ளிகளில் கற்பதற்கான வாய்ப்புகள்

 

கடந்த ஆண்டில் பட்டம் பெற்ற 92% பெட்போர்ட்ஷியர் மாணவர்கள் தொழில் வாய்ப்புகளைப் பெற்று அல்லது உயர் கல்வியைத் தொடர்பவர்களாகவும் காணப்படுகின்றனர். பல்கலைக்கழகத்தினால் அடையப்பெற்ற மிக உயர்ந்த எண்ணிக்கை இதுவாகும் (உயர்கல்வி கவுன்சிலர்களின் (DLHE) 2013 கணக்கெடுப்பின்படி குறிப்பிடப்பட்டது).

(DLHE) 2013 அறிக்கையில் மேலும் குறிப்பிடப்படுவதாவது, பெட்போர்ட்ஷியர் மாணவர்களில் கடந்த ஆண்டு பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறியவர்கள், தற்போது பட்டதாரி மட்ட வேலைவாய்ப்பில் உள்ளனர். நிபுணத்துவ மற்றும் நிர்வாக ரீதியான பதவிகள் 8% இற்கு மேலாகவும், 73.5% அளவிற்கும் அதிகரித்துள்ளது.

அனுமதித் தகைமைகள்

  • HND / Advanced Diploma அல்லது அவற்றுக்கு ஈடான தகைமைகள்.
  • SLIIT / NIBM / NSBM / ICBT / ACBT / APIIT ஆகியவற்றின் 2 ஆண்டுகள் பூர்த்தி செய்திருத்தல்.

பாடநெறிக்காலம்

மாணவர்களுக்கு ஏற்ற வகையில் வார நாட்களில் அல்லது வார இறுதி நாட்களில், ஒரு வருட காலத்திற்கு நடைபெறும்.

பாடநெறி அமைப்பு

பிணைப்பு வடிவமைப்பு, நிறுவல், கட்டமைப்பு, பராமரிப்பு மற்றும் முகாமைத்துவம் மற்றும் சமகால தொழில்நுட்பங்களின் பயன்பாடு ஆகியவற்றின் தொழில்நுட்ப அம்சங்களில் இக் கற்கைநெறி கவனம் செலுத்துகின்றது. கணனிப் பிணைப்பியல் இளமானி பட்டக் கற்கையானது, பிணைப்பு வடிவமைப்பு மற்றும் எவ்வாறு அவை செயற்படுகின்றன என்பதனைப் பற்றி ஆழமான புரிதலுடன் கற்க உதவுகின்றது. வளர்ந்து வரும் இத்துறையில் ஒரு தொழிலை செய்யத் தேவையான அறிவு மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றையும் இக் கற்கைநெறி வழங்குகின்றது.

  • சமூக மற்றும் நிபுணத்துவ திட்ட முகாமைத்துவம்.
  • பட்டதாரி திட்டம்
  • ஆராய்ச்சி முறைகள் மற்றும் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள்
  • உயர் நிலைப் பிணைப்பியல்
  • கணினி பாதுகாப்பு மற்றும் கருவி அளவீடுகள்
  • கம்பியற்ற (வயர்லஸ்) தொடர்பாடல் மற்றும் பிணைப்பியல்

தொழில்துறை மற்றும் தொடர்ந்த கற்கைகள்

தொடர்ந்த கற்கைகள்: கணனிப் பிணைப்பியல், மொபைல் பிணைப்பியல், கணனிப் பாதுகாப்பு, கணனி அறிவியல் அல்லது வேறு ஏதேனும் தலைப்பிலான முதுமானிப் பட்டக் கற்கை (MSc) மற்றும் ஆய்வியல் நிபுணர் / கலாநிதிப் (MPhil / PhD) பட்டக் கற்கைகள்

பாடநெறிக்கட்டணம்

உள்ளூர் கட்டணம்: TBC
பல்கலைக்கழகக் கட்டணம்: GBP 700 (2016/2017 உள்வாங்கல்)
கட்டணம் செலுத்தவேண்டிய கடைசித் திகதி பற்றி, கல்வி விவகார பிரிவினரால் அறிவுறுத்தப்படும்.

அடுத்த கட்டம் – தொழில் வாய்ப்புக்கள்

இப்பட்டத்தினைப் பெற்ற பட்டதாரிகள் பின்வருவனவற்றில் எத்துறையிலுமான தொழில் வாய்ப்பினைப் பெற்றுக் கொள்ள முடியும்.

  • உதவிதள மற்றும் பிணைப்பு ஆதரவு
  • பிணைப்புப் பாதுகாப்பு நிபுணர்கள்
  • பிணைப்பு / அமைப்புக்கள் பொறியியல்
  • அமைப்புக்கள் / இணையத்தளம் / பிணைப்பு நிர்வாகம்
  • பிணைப்பு / தகவல் அமைப்பு முகாமையாளர்கள், திட்ட முகாமைத்துவம் மற்றும் வேறு பல கணனி தொடர்பான தொழில் வாய்ப்புக்கள்

விண்ணப்பிக்கும் முறை

பாடநெறியைத் தொடர விரும்புபவர்கள், முறையான சுய விபரக் கோவையுடன், கல்வி சார் ஆவணங்களையும் இணைத்து, computing@sliit.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தல் வேண்டும். மேலதிக விபரங்களுக்கு 0773550660, 0777636067 or 0117543600 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்

இப் பாடநெறிக்கான குறித்தளவு வெற்றிடங்களே காணப்படுவதனால், உங்கள் இடத்தைப் பதிவு செய்துகொள்ள இப்போதே விண்ணப்பியுங்கள்.

இன்றே விண்ணப்பியுங்கள்